/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிதி ஒதுக்கிய பின்பு தொண்டி ஜெட்டி பாலம் சீரமைக்க ஆய்வு
/
நிதி ஒதுக்கிய பின்பு தொண்டி ஜெட்டி பாலம் சீரமைக்க ஆய்வு
நிதி ஒதுக்கிய பின்பு தொண்டி ஜெட்டி பாலம் சீரமைக்க ஆய்வு
நிதி ஒதுக்கிய பின்பு தொண்டி ஜெட்டி பாலம் சீரமைக்க ஆய்வு
ADDED : மே 20, 2025 12:39 AM
தொண்டி: தொண்டி ஜெட்டி பாலத்தினை சீரமைப்பது அல்லது அகற்றுவது குறித்து நிதி ஒதுக்கீடு செய்தபிறகு ஆய்வு செய்யப்படும் என, மீன்பிடி துறைமுக திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொண்டி ஜெட்டி பாலம் பழுதடைந்து மூடபட்டதால் எவ்வித பயன்பாடும் இல்லாமல் உள்ளது. மீனவர்களின் நலனுக்காகவும், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று முதல்வரின் முகவரி இணையதளத்திற்கு தொண்டி மக்கள் நல வளர்ச்சி சங்க தலைவர் சுலைமான் மனு அனுப்பினார்.
அதற்கு ராமநாதபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் சண்முகம் பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது- ஜெட்டி பாலத்தினை சீரமைப்பது, அல்லது அகற்றுவது குறித்து பாலத்தின் ஸ்திரத்தன்மை குறித்த ஆய்வு பணிகள் மேற்கொள்வதற்கு உரிய ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெறபட்ட பின்னர் ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் மீன்பிடி துறைமுக திட்ட உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் கடிதத்தில் தெரிவிக்கபட்டுள்ளது எனக்கூறியுள்ளார்.