/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் விதித்த சப்கலெக்டர்
/
விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் விதித்த சப்கலெக்டர்
விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் விதித்த சப்கலெக்டர்
விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் விதித்த சப்கலெக்டர்
ADDED : ஜன 05, 2025 11:57 PM
பரமக்குடி; பரமக்குடியில் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காத வாகன ஓட்டிகளுக்கு சப்கலெக்டர் அபிலாஷா கவுர் ரூ.22ஆயிரம் வரை அபராதம் விதித்துள்ளார்.
பரமக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சப் கலெக்டர் அபிலாஷா கவுர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பரமக்குடி, ராமநாதபுரம் நான்கு வழி சாலையில் 'ஹெல்மெட்' அணியாமல் சென்ற டூவீலரில் சென்ற 21 பேருக்கு ரூ.1000 வீதமும், நம்பர் பிளேட் குறைபாடுடைய இரு டூவீலர்களுக்கு ரூ.500 வீதம் என ரூ.22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அனைத்து வாகன ஓட்டிகளும் டூவீலர்களில் முறையான ஆவணங்களை வைத்திருப்பத்துடன், உயிர் காக்கும் 'ஹெல்மெட்' கட்டாயம் அணிய வேண்டும் என சப்கலெக்டர் தெரிவித்தார்.