/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிக்கல் சுற்றுவட்டார பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
/
சிக்கல் சுற்றுவட்டார பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
சிக்கல் சுற்றுவட்டார பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
சிக்கல் சுற்றுவட்டார பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
ADDED : அக் 23, 2025 11:20 PM

சிக்கல்: சிக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் வயல்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
சிக்கல் அருகே பேய்க்குளம், டி.ஆலங்குளம், சொக்காணை, வல்லக்குளம், பன்னந்தை, கழநீர்மங்கலம் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. டி. ஆலங்குளம் விவசாயி போஸ் கூறியதாவது:
விவசாயிகள் காலை முதல் மண்வெட்டியுடன் வயல்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவதற்காக விவசாய வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் விதைக்கப்பட்ட விதை நெல் தண்ணீரில் அழுகும் நிலையில் உள்ளது. மீண்டும் விதைக்கும் நிலையிலேயே விவசாயிகள் உள்ளனர்.
தற்போது நெல் விதைத்தால் அவை தண்ணீரில் மிதந்து வீணாகி விடும். இதை தவிர்ப்பதற்காக விதை நெல்லை மூன்று மணி நேரம் நீரில் ஊற வைத்து பின்னர் நெல் வயலில் இட்டால் மீண்டும் முளைக்க வாய்ப்பு உள்ளது. பயிரின் ஆரம்ப நிலையிலேயே தண்ணீர் பெருக்கெடுத்து இருப்பதால் நீர் அதிகளவு இருப்பதால் சூரிய ஒளி இன்றி அழுகும் அபாயம் உள்ளது. நீர் வடிந்த பிறகு விவசாயத்திற்கு பயனுள்ளதாக அமையும் என்றார்.

