/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவிலில் மானியத்தில் விதை நெல் வினியோகம்; விவசாயிகளுக்கு அழைப்பு
/
நயினார்கோவிலில் மானியத்தில் விதை நெல் வினியோகம்; விவசாயிகளுக்கு அழைப்பு
நயினார்கோவிலில் மானியத்தில் விதை நெல் வினியோகம்; விவசாயிகளுக்கு அழைப்பு
நயினார்கோவிலில் மானியத்தில் விதை நெல் வினியோகம்; விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஆக 28, 2025 06:22 AM
நயினார்கோவில் : -பரமக்குடி அருகே நயினார்கோவில் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 10 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட உள்ளது. இதற்கு தேவையான விதை நெல் மானிய விலையில் பெற்றுக்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தற்போது சம்பா பருவ நெல் விதைக்க மழை பொழிவு மற்றும் சீரான சீதோசன நிலை உள்ளது. ஆகவே விவசாயிகள் உழவு பணி முடித்து விதைக்க தயாராக வேண்டும்.
நயினார்கோவில் வேளாண் விரிவாக்க மையத்தில் உயர் விளைச்சல் தரும் தரமான சான்று அட்டை பொருந்திய விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஆர்.என்.ஆர். 15048, என்.எல்.ஆர். 34449 போன்றவை 40 மெட்ரிக் டன் அளவு இருப்பு உள்ளது.
தேசிய உணவு மற்றும் சத்து பாதுகாப்பு இயக்கம் விதை கிராமத் திட்டத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ. 20 மானியத்தில் விதை நெல் வழங்கப்படுகிறது. இவை 120 முதல் 125 நாட்களில் வளரக்கூடியதாகும். ராமநாதபுரம் மாவட்ட கால நிலைக்கு 100 நாட்களுக்குள் அறுவடைக்கு வருகிறது. திரவ உயிர் உரங்கள் நெல் நுண்ணூட்டக் கலவை 50 சதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதேபோல் உளுந்து, குதிரைவாலி, கேழ்வரகு விதைகள் வாங்கி விவசாயிகள் பயன்பெறலாம் என நயினார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் பானுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

