ADDED : அக் 07, 2024 11:02 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம்மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஏழை பெண்களில் கணவனை இழந்தவர், ஆதரவற்ற பெண்களுக்கு ஒருவருக்கு தலா 40 கோழிக்குஞ்சுகள் வீதம் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது.
ஆதார் அட்டை நகலுடன் விண்ணப்பிக்கலாம்.கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.திட்டம் செயல்படுத்துதலில் 50 சதவீதம் ரூ.1600வழங்க வேண்டும். முதலில் ரூ.3200 செலுத்தி கொள்முதல் செய்ய வேண்டும்.
மாநில ஊரக வாழ்வாதாரஇயக்கத்தில் பதிந்துள்ள சுய உதவிக்குழுக்களைச்சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முந்தைய ஆண்டுகளில் இலவச கறவை மாடு, செம்மறியாடுதிட்டம் மற்றும் கோழி வளர்ப்பு திட்டங்களில்பயனடைந்தவராக இருத்தல் கூடாது.
தகுதியுள்ள பெண்கள் அக்.15க்குள் அருகில் உள்ளகால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகிவிண்ணப்பங்களை வழங்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங்காலோன் தெரிவித்துள்ளார்.