/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்டுப்பரமக்குடி குழந்தைகள் மையம் முன் திடீர் பள்ளம்
/
காட்டுப்பரமக்குடி குழந்தைகள் மையம் முன் திடீர் பள்ளம்
காட்டுப்பரமக்குடி குழந்தைகள் மையம் முன் திடீர் பள்ளம்
காட்டுப்பரமக்குடி குழந்தைகள் மையம் முன் திடீர் பள்ளம்
ADDED : டிச 06, 2024 05:24 AM

சுகாதாரமின்றி தொற்று அபாயம்
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள காட்டுப்பரமக்குடி குழந்தைகள் மையம் வாசலில் திடீர் பள்ளம் ஏற்பட்டு கழிவு நீர் தேங்கியதால் சுகாதாரக்கேட்டில் தொற்று நோய் அபாயம் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
பரமக்குடி நகராட்சி காட்டுப்பரமக்குடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் 85-வது மையம் செயல்படுகிறது. இங்கு 2 முதல் 5 வயதுள்ள 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினம் வந்து செல்கின்றனர்.
குழந்தைகளுக்கு தினமும் ஊட்டச்சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. மேலும் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்களும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையில் நுழைவு வாயிலில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகள் உட்பட கர்ப்பிணிகள் தடுமாற்றம் அடைகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் நகராட்சி கிணறு இருந்த நிலையில் அது மூடப்பட்டு தளம் அமைக்கப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
இச்சூழலில் குழந்தைகள் மையத்தில் உள்ள கழிப்பறை கதவுகள் உடைந்து வீணாகி உள்ளது.
மேலும் அருகில் உள்ள இடத்தில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதாரக் கேடு உள்ளது.
குழந்தைகள் மையத்தின் வாசல் முன்பு வாறுகால் மூடப்படாமல் செடி, கொடிகள் அடர்ந்து இருக்கிறது. இரவு நேர பாராகவும் சிலர் பயன்படுத்துகின்றனர்.
எனவே அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் பள்ளத்தை சீரமைத்து குழந்தைகள் மையத்தை பராமரிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.