/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் திடீர் கொந்தளிப்பு
/
தனுஷ்கோடியில் திடீர் கொந்தளிப்பு
ADDED : ஏப் 15, 2025 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடலில் நேற்று மாலை 5:00 மணிக்கு திடீரென கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, ராட்சத அலைகள் எழுந்தன.
தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பாறைகள் மீது ஆக்ரோஷமாக மோதின. தனுஷ்கோடி சாலையில் 2 கி. மீ.,துாரத்திற்கு கடல் நீர் பரவியது.
திடீரென ராட்சத அலைகள் எழுந்ததைக் கண்ட சுற்றுலா பயணிகள் சுனாமி வருகிறதோ என பீதியடைந்து, அவசர அவசரமாக வாகனங்களில் ஏறி திரும்பினர்.
திடீரென கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்த அலைகள் எழுவது கள்ளக் கடல் என்றழைக்கப்படுகிறது. தனுஷ்கோடியில் 'கள்ளக்கடல்' ஏற்பட்டு இருக்கலாம் என மீனவர்கள் கூறினர்.