/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை கும்பாபிேஷகத்திற்கு போதுமான பஸ்கள் இயக்காததால் அவதி
/
உத்தரகோசமங்கை கும்பாபிேஷகத்திற்கு போதுமான பஸ்கள் இயக்காததால் அவதி
உத்தரகோசமங்கை கும்பாபிேஷகத்திற்கு போதுமான பஸ்கள் இயக்காததால் அவதி
உத்தரகோசமங்கை கும்பாபிேஷகத்திற்கு போதுமான பஸ்கள் இயக்காததால் அவதி
ADDED : ஏப் 05, 2025 05:55 AM

ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் கும்பாபிேஷகத்திற்கு போதுமான சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்துக்கழகத்தினர் இயக்காததால் பயணிகள் அவதிப்பட்டனர்.
ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிேஷகம், மரகத நடராஜர் சந்தனம் களையப்பட்ட நிலையில் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தனர். அனைவரும் ராமநாதபுரம் வந்து அங்கிருந்து உத்தரகோசமங்கைக்கு பயணித்தனர்.
ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து போதுமான பஸ்கள் இயக்கப்படாததால் பஸ் ஸ்டாண்டில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். உத்தரகோசமங்கை சிறப்பு பஸ்களில் அளவுக்கு அதிகமான பயணிகள் இருந்ததால் பஸ்களில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
போதுமான அரசு பஸ்களை இயக்காததால் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை பயணிகளுக்கு ஏற்பட்டது. அப்படியே சிறப்பு பஸ்கள் சென்றாலும் உத்தரகோசமங்கையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் திரும்பி பஸ்கள் வராததால் பயணிகள் கோயிலுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.