ADDED : செப் 12, 2026 04:48 AM

அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே பாகம்பிரியாள் அம்மன் கோயில் தேர் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டி வைக்கப்படும் இந்த குப்பை எரிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் புகை கோயிலுக்குள்ளும், குடியிருப்பு பகுதியிலும் சூழ்ந்துள்ளது. இந்த புகை மண்டலத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
குப்பை வண்டிகள் இல்லாததால் வேறு வழியின்றி ஆங்காங்கே கொட்டி தீ வைக்கிறோம் என்று ஊராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
