/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிளகாய் விவசாயிகளுக்கு காப்பீடு தொகை: கலெக்டருக்கு கோரிக்கை
/
மிளகாய் விவசாயிகளுக்கு காப்பீடு தொகை: கலெக்டருக்கு கோரிக்கை
மிளகாய் விவசாயிகளுக்கு காப்பீடு தொகை: கலெக்டருக்கு கோரிக்கை
மிளகாய் விவசாயிகளுக்கு காப்பீடு தொகை: கலெக்டருக்கு கோரிக்கை
ADDED : பிப் 16, 2024 04:57 AM
ஆர்.எஸ்.மங்கலம்: கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிர் காப்பீட்டில்பதிவு செய்த மிளகாய் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்கள் வறட்சி, மழை, இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் போது இழப்பீடு பெரும் வகையில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் மாவட்டத்தில் விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்யும் நெற்பயிர்கள் மட்டுமின்றி மிளகாய், பருத்தி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கும் விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக மாவட்டத்தில் மிளகாய் பயிருக்கு இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை.
நடப்பு ஆண்டில்சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய்க்கு ஜன.31 வரை விவசாயிகள் இத்திட்டத்தில் பிரிமியம் செலுத்தியுள்ளனர்.
எனவே இரண்டு ஆண்டுகளாக மிளகாய்க்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.