/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவர்களுக்கு கோடை கொண்டாட்டப் போட்டி
/
மாணவர்களுக்கு கோடை கொண்டாட்டப் போட்டி
ADDED : மே 28, 2025 11:14 PM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே கோடை விழா கொண்டாட்டப் போட்டிகள் நடத்தப்பட்டது.
தங்கச்சிமடம் கிளை நுாலகம் மற்றும் ராமேஸ்வரம் வட்டார தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான கோடை விழா கொண்டாட்டப் போட்டிகள் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் 3 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கை காட்சி குறித்த ஓவியப் போட்டியும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 'என்னை கவர்ந்த தலைவர் மற்றும் அறிவியல் விஞ்ஞானி' என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் நுாலகத்தின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடந்தது.
இப்போட்டியில் 60 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜூன் 1ல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தங்கச்சிமடம் கிளை நுாலகர் சேசுதாஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் செந்தில்குமார், பொருளாளர் லியோன், துணைச் செயலாளர் ஜெரோம், சமூக ஆர்வலர் முருகேசன், ஆசிரியர்கள் விஜயா, செந்தில்குமார், சசிகுமார் உட்பட பலர் செய்திருந்தனர்.