/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கால்நடைகளால் பாதிப்பு ஏற்படுவதால் கோடை சாகுபடியை கைவிட்டனர்
/
கால்நடைகளால் பாதிப்பு ஏற்படுவதால் கோடை சாகுபடியை கைவிட்டனர்
கால்நடைகளால் பாதிப்பு ஏற்படுவதால் கோடை சாகுபடியை கைவிட்டனர்
கால்நடைகளால் பாதிப்பு ஏற்படுவதால் கோடை சாகுபடியை கைவிட்டனர்
ADDED : மார் 18, 2025 06:47 AM
திருவாடானை: கால்நடைகளால் பாதிப்பு ஏற்படுவதால் கோடை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
திருவாடானை தாலுகாவில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ஆண்டுதோறும் 26 ஆயிரத்து 650 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
மூன்று ஆண்டுகளாக போதுமான மழை பெய்ததால் அனைத்து கண்மாய்களும் நிரம்பியுள்ளது.
இந்த ஆண்டும் விவசாயத்திற்கு தேவையான மழை பெய்ததால் கண்மாய் மடைகளை திறக்காமல் விவசாயம் செய்யப்பட்டது.தற்போது கண்மாய்களில் மழை நீர் தேங்கியிருந்தும் கால்நடைகளால் பாதிப்பு ஏற்படுவதால் கோடை விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
ஆதியூர் விவசாயிகள் கூறியதாவது:
கோடை விவசாயத்திற்கு மானிய விலையில் விதை நெல் விற்பனை செய்யப்படுவதில்லை. நெல் சாகுபடி செய்ய முடியாவிட்டாலும் எள், உளுந்து மற்றும் பயறு வகைகளை சாகுபடி செய்யத் தயாராக உள்ளோம்.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பது எள். அதிக மழையும் தேவைப்படாது.
ஆனால் கால்நடைகளால் பாதிப்பு ஏற்படுவதால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.
பல ஆயிரம் செலவு செய்து ஆடு, மாடுகள் மேய்ந்து விடுவதால் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். ஆகவே கோடை விவசாயம் செய்ய முடியவில்லை.
வயலில் மேயும் மாடுகளை பட்டியில் அடைக்கவும், கால்நடை உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்து அதிகாரிகள்நடவடிக்கை எடுத்தால் தான் இனிவரும் காலங்களில் கோடை விவசாயம் செய்ய முடியும்என்றனர்.