/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு: உப்பள பாத்திகளில் மழைநீர் தேங்கியது
/
கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு: உப்பள பாத்திகளில் மழைநீர் தேங்கியது
கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு: உப்பள பாத்திகளில் மழைநீர் தேங்கியது
கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு: உப்பள பாத்திகளில் மழைநீர் தேங்கியது
ADDED : மே 01, 2025 06:12 AM

திருப்புல்லாணி: ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலிநோக்கம் அரசு உப்பளம் உட்பட திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, ஆனைகுடி, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்களில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மழைக் காலம் முடிந்து கோடை காலத்தை எதிர்நோக்கி உப்பளங்களில் பிப்., முதல் உப்பள பாத்திகளில் தேங்கி இருந்த ஜிப்சம் மற்றும் அடி உப்பு எடுக்கப்பட்டு பாத்திகளில் சமன் செய்து உப்பு உற்பத்திக்கான நிலமாக மாற்றப்பட்டு வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் உப்பள பாத்திகள் சீரமைக்கப்பட்டு உப்பு உற்பத்திக்கான நிலையில் இருந்து வரும் வேளையில் சமீபத்திய கோடை மழையின் தாக்கத்தால் பெருவாரியான உப்பளங்களில் உற்பத்தி பாதிப்பை சந்தித்தது.
இரண்டு நாட்களாக பெய்த கோடை மழை தாக்கத்தால் உப்பு உற்பத்திக்காக உள்ள பாத்திகளில் தண்ணீர் பெருவாரியாக தேங்கியது. உப்பளத் தொழிலாளர்கள் கூறியதாவது:
தற்போது கொளுத்தும் கோடை வெயிலை பயன்படுத்தி அதிகாலை முதல் 10:00 மணிக்குள் வேலை செய்கிறோம். பின்னர் மதியம் முதல் மாலை வரை உப்பளப் பாத்திகளில் உப்பு சேகரித்து கரையோரங்களில் குவியிலாக குவித்து வைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் எதிர்பாராமல் பெய்யும் கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பை சந்திக்கிறது. சேகரிக்கப்பட்ட உப்பு குவியல்களில் தார்ப்பாய் வைத்து முடிந்த அளவு பாதுகாக்கிறோம்.
ஒரு டன் உப்பு ரூ. 3000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இவற்றில் உரிய முறையில் அயோடின் சேர்த்தால் அவை உணவுக்கான உப்பாக பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்கின்றனர். அவற்றில் அடுத்த நிலையில் உள்ள உப்புகள் கெமிக்கல் தொழிற்சாலைகளுக்காகவும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்காகவும் லாரிகள் மூலமாக துாத்துக்குடி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றனர்.
--