/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகசூல் நிலையை அடைந்த கோடை நெல் விவசாயம்
/
மகசூல் நிலையை அடைந்த கோடை நெல் விவசாயம்
ADDED : ஜூலை 16, 2025 11:19 PM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசனப் பகுதிகளான இருதயபுரம், பொட்டக்கோட்டை, புலி வீரதேவன் கோட்டை, பிச்சனார் கோட்டை, நோக்கன் கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கோடை நெல் விவசாயம் செய்யப்பட்டது.
பெரிய கண்மாய் நீரை பயன்படுத்திய நிலையில் வறட்சியால் கண்மாய் நீர் வற்றியதால் கடைசி நேரத்தில் கோடை நெல் விவசாயிகள் தண்ணீர் இன்றி கடுமையான பாதிப்பை சந்தித்தனர்.
இந்த நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு கொண்டு வரப்பட்டதால், பெரிய கண்மாயில் வைகை நீர் தேக்கப்பட்டது.
கண்மாயில் தேங்கிய தண்ணீரை கோடை நெல் விவசாயத்திற்கு பயன்படுத்தியதால் தற்போது கோடை நெல் விவசாயம்மகசூல் நிலையை அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.