/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொடர் வறட்சியால் கருகிய கோடை நெல் விவசாயம்
/
தொடர் வறட்சியால் கருகிய கோடை நெல் விவசாயம்
ADDED : ஜூலை 02, 2025 11:28 PM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசனப் பகுதிகளான இருதயபுரம், நெடும்புலி கோட்டை, நோக்கன்கோட்டை, பொட்டக் கோட்டை, புலி வீரத் தேவன் கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான நெல் வயல்கள் தற்போது மகசூல் நிலையை எட்டியுள்ளன.
இந்நிலையில் தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியால் பெரிய கண்மாயில் தண்ணீர் வற்றியதாலும், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததாலும், பெரும்பாலான வயல்களில் நெற்பயிர்கள் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கருகி வருகின்றன. இந்த நிலையில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற வைகை தண்ணீரை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.