ADDED : அக் 31, 2025 11:41 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை, தொண்டியில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்திருந்த நிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கடுமையான சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் இருந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக பரவலாக மழை பெய்தது. இதனால் வெயில் தாக்கம் தணிந்து ஒரு வாரத்திற்கும் மேலாக இதமான சூழல் காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
