/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
100 ஆண்டு நிறைவடைந்த சேஷ வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள்
/
100 ஆண்டு நிறைவடைந்த சேஷ வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள்
100 ஆண்டு நிறைவடைந்த சேஷ வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள்
100 ஆண்டு நிறைவடைந்த சேஷ வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள்
ADDED : ஆக 05, 2025 04:29 AM

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவத்தில் 100 ஆண்டுகள் நிறைவடைந்த சேஷ வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் அருள் பாலித்தார்.
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் நடக்கிறது.
பெருமாள் காலை, இரவு வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு பிரம்மோற்ஸவத்தில் 100 ஆண்டுகள் நிறைவடைந்த சேஷ வாகனத்தில் பெருமாள் பரமபதநாதனாக வீற்றிருந்தார். தீப ஆராதனைகள் நடந்து வீதி வலம் வந்த பெருமாளுக்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர்.
நேற்று கருட வாகனத்தில் அருள்பாலித்த நிலையில் இன்று அனுமந்த வாகனத்தில் உலா வருகிறார்.
ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.