/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர் வலையில் சிக்கிய சூரிய மீன்
/
மீனவர் வலையில் சிக்கிய சூரிய மீன்
ADDED : ஜூலை 24, 2025 01:22 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கியது.
பாம்பனில் இருந்து நேற்றுமுன்தினம் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை திரும்பினர். இதில் ஒரு படகில் அரியவகை சூரிய மீன் சிக்கியது. இதற்கு நீளமான வால் இல்லாமல், துடுப்பு போன்று உள்ளது.
இம்மீன் 2 அடி உயரம், 3 அடி நீளத்தில் 6 கிலோ இருந்தது. ஆழ்கடலில் மட்டுமே வசிக்கும் இந்த சூரிய மீன் ஒரு மணிக்கு 40 முதல் 60 கி.மீ., வேகத்தில் நீந்தி செல்லும் தன்மைகொண்டது.
இந்த மீன் அழிவின் விளிம்பில் உள்ளதால் பெரும்பாலும் மீனவர்கள் வலையில் சிக்குவதில்லை. இதனிடையே இம்மீன் குறித்து ஆய்வு செய்ய ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், மீனவர்களிடம் இருந்து வாங்கி சென்றனர்.