ADDED : ஆக 16, 2026 11:11 PM

அ நிறம் | அளவு
திருப்புல்லாணி: -ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே ஆனைகுடி, காஞ்சிரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெருவாரியாக உப்பளங்கள் உள்ளன. தற்போது கடுமையான வெயில் மற்றும் சீரான காற்று காரணமாக இங்கு உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் மார்ச் மாதம் துவங்கி அக்., வரை உப்பு எடுக்கும் பணி நடக்கிறது. இங்கிருந்து உப்பு துாத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. உணவுக்காகவும், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் தனித்தனியாக உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்தாண்டு டன் உப்பு ரூ.3500 வரை விற்பனையான சூழலில், தற்போது வெயிலால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்து டன் ரூ.2500 முதல் ரூ.3000க்கு விற்கப்படுகிறது.
