/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை அரசுப்பள்ளிகளில் 2ம் பருவ பாடப்புத்தகம் வழங்கல்
/
திருவாடானை அரசுப்பள்ளிகளில் 2ம் பருவ பாடப்புத்தகம் வழங்கல்
திருவாடானை அரசுப்பள்ளிகளில் 2ம் பருவ பாடப்புத்தகம் வழங்கல்
திருவாடானை அரசுப்பள்ளிகளில் 2ம் பருவ பாடப்புத்தகம் வழங்கல்
ADDED : அக் 07, 2024 10:42 PM
திருவாடானை : திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் 6083 மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.காலாண்டு விடுமுறை முடிவடைந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. எட்டு நாட்கள் விடுமுறை முடிந்து மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர். தமிழக அரசின் பாடத்திட்டத்தின் படி அரசு முதல் பருவம் முடிந்து நேற்று முதல் இரண்டாம் பருவம் தொடங்கியதால் அதற்கான பாடப்புத்தங்கள் கடந்த இரு நாட்களாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தது.
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 79 அரசு தொடக்கப்பள்ளிகள், 19 நடுநிலைப் பள்ளிகள், 14 அரசு உதவி பெறும் பள்ளிகள் என 112 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் படிக்கும் 6083 மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் வழங்கபட்டன.
கல்வி அலுவலர்கள் கூறுகையில், பள்ளிகளில் வகுப்பறைகள் உட்பட துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகளில் திறக்கப்பட்ட நாளிலேயே இரண்டாம் பருவ பாட நுால்கள் வழங்கப்படவேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.
மேலும் பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.