ADDED : அக் 28, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி,: கமுதி அருகே செங்கப்படை பகுதியில் அதானி சோலார் மின் உற்பத்தி நிலையம் செயல்படுகிறது. இந்நிறுவனம் சார்பில் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை அதிகாரி வினோத் தலைமை வகித்தார். புதுக்கோட்டை ஊராட்சி தலைவர் வீரபாண்டி, இடையங்குளம் ஊராட்சி தலைவர் தங்கம் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை, இடையங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட 300க்கும் அதிகமான விவசாயிகளுக்கு தலா ஒரு கிலோ பருத்தி விதைகள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரி ஜனார்த்தனன், வழக்கறிஞர் அப்துல் சமத் சேட் செய்தனர்.