/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மருந்து வழங்கல்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மருந்து வழங்கல்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மருந்து வழங்கல்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மருந்து வழங்கல்
ADDED : நவ 12, 2025 09:57 PM

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மருந்துகள் வழங்கப்பட்டது.
இங்கு ஓ.ஆர்.எஸ்., எனப்படும் ஓரல் ரிஹைடிரேசன் சால்ட்ஸ் ஐ.பி., மருந்தை செவிலியர் வழங்கியுள்ளார். அதில் தயாரிப்பு தேதி ஆக., 2023 எனவும், காலாவதி தேதி ஜூலை 2025 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காலாவதி ஊட்டச்சத்து பாக்கெட்டுகளை நோயாளிகளுக்கு தொடர்ந்து வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. நரிப்பையூர் அருகே வேலாயுதபுரம் சிவசக்தி கணேசன் கூறியதாவது:
நேற்று முன்தினம் எனது மகனுக்கு காய்ச்சல் பாதிப்பால் நரிப்பையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்தேன். அங்கிருந்த செவிலியர் எனது மகனுக்கு ஊட்டச்சத்து மருந்தை கொடுத்தார். அதனை கொண்டு போய் வீட்டில் தண்ணீரில் கலக்குவதற்காக பிரித்த போது மருந்தின் காலாவதி தேதி முடிவுற்றது தெரிய வந்தது.
நேற்று காலை சம்பந்தப்பட்ட செவிலியரிடம் காட்டி ஏன் இப்படி காலாவதியான மருந்து பாக்கெட்டுகளை நோயாளிகளுக்கு தருகிறீர்கள். அவற்றை உரிய முறையில் திருப்பி அனுப்ப வேண்டும். மற்றவர்களுக்கும் கொடுத்தால் உடல் உபாதை ஏற்படும் என விளக்கி கூறினேன்.
கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவு வைரஸ் காய்ச்சல் பரவும் நிலையில் காலாவதியான ஊட்டச்சத்து முதலுதவி மருந்துகளை வழங்கினால் அவற்றில் எவ்வித பயனும் இருக்காது. எனவே மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குனர் இது போன்ற கலாவதியான மருந்துகளை திரும்ப பெற்று முறையான தேதியுள்ள மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சாயல்குடி வட்டார மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன் கூறுகையில் பழைய மருந்து, மாத்திரைகளை தனியாக பராமரிக்க கூறியிருந்தேன். அதை தனியாக வைக்காமல் வழங்கி விட்டனர். இனி இதுபோல் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

