/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்
/
விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்
ADDED : செப் 30, 2024 04:33 AM
பரமக்குடி: பரமக்குடி அருகே சத்திரக்குடி வட்டாரத்தில் உள்ள வேளாண் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் அரிசி திட்டத்தில் தொகுப்பு செயல் விளக்க திடல் 12 ஹெக்டேரில் இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மானியத்தின் 40 கிலோ விதை நெல், 2 லிட்டர் உயிர் உரங்கள், 12.5 கிலோ நெல் நுண்ணுாட்ட சத்து, 2.5 கிலோ பூஞ்சான கொல்லியான சூடோமோனாஸ் உள்ளிட்டவற்றை வேளாண் இணை இயக்குனர் முருகேசன் வழங்கினார். நெல் விதைகளை விதைக்கும் கருவி மூலம் வரிசைக்கு வரிசை 20 செ.மீ., இடைவெளியில் விதைக்க வேண்டும்.
உரங்களை வேளாண் அலுவலர்களின் ஆலோசனையின் படி இட வேண்டும் என்றனர்.
துணை இயக்குனர் மத்திய திட்டம் பாஸ்கர மணியன், சத்திரக்குடி வேளாண் உதவி இயக்குனர் ராஜேந்திரன், துணை அலுவலர் வித்யாசாகர், உதவி அலுவலர்கள் ஜெயசங்கர், கவுசல்யா, பரிமளா, வாசமலர் பங்கேற்றனர்.