நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக 80 வயது முதியவர் நுழைவு வாயிலில் படுத்திருந்தார். யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியாமல் இருந்தது. சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் வெயிலில் படுத்திருந்தார்.
இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திருவாடானை போலீசார் விசாரணை செய்து பாண்டுகுடியை சேர்ந்த முதியவரின் உறவினர்களுக்கு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து உறவினர்கள் முதியவரை அழைத்து சென்றனர்.

