தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ லைசென்ஸ் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

 லைசென்ஸ் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

 லைசென்ஸ் துப்பாக்கிகள் ஒப்படைப்பு


ADDED : மே 11, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 11:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: சட்டசபை தேர்தல் முடிந்ததால் போலீஸ்ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகளை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அதன் உரிமையாளர்கள் திரும்ப பெற்று செல்கின்றனர். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி அசம்பாவிதங்களை தவிர்க்கவும், அமைதியான முறையில் தேர்தல் நடைபெறவும் அந்தந்தப் பகுதிகளில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களை போலீஸ்ஸ்டேஷன்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, எஸ்.ப.பட்டினம் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களது துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ்ஸ்டேஷன்களில் ஒப்படைத்தனர்.

அவை அனைத்தும் போலீஸ் பாதுகாப்பில் இருந்தது. தற்போது தேர்தல் நடைமுறைகள் முடிந்ததால் துப்பாக்கிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி துவங்கியது.

தக்க ஆவணங்களை சரிபார்க்கப்பட்ட பின் பதிவேடுகளில் கையெழுத்திட்டு உரிமையாளர்கள் வாங்கி செல்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us