/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தங்கச்சிமடம் குளத்தில் படிக்கட்டு இன்றி சுற்றுசுவர்: அரசுநிதி வீணடிப்பு

ADDED : அக் 28, 2024 04:50 AM

ராமேஸ்வரம், : -ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் கோயில் குளத்தை சுற்றி அமைத்த சுவரில் படிக்கட்டு இல்லாததால், நீராட முடியவில்லை. அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது என மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தங்கச்சிமடம் ஊராட்சி நாலுபனை பஸ் ஸ்டாபில் உள்ள முனியசாமி கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோயில் அருகேதீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தில் பக்தர்கள், உள்ளூர் மக்களும் நீராடி குளித்து செல்கின்றனர். இந்நிலையில்
இரு ஆண்டுகளுக்கு முன் மண்டபம் ஒன்றிய அலுவலகம் மூலம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ. 9 லட்சத்து 50ஆயிரம் செலவில் குளத்தை துார்வாரி மண் சரியாதபடி கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைத்தனர்.
ஆனால் குளத்தில் படிக்கட்டு இன்றி சுற்றுச்சுவர் கட்டியதால் யாரும் குளிக்க முடியவில்லை. மேலும் கால்நடைகள் குளத்தில் தவறி விழுந்தால் வெளியே வர முடியாமல் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இரு ஆண்டுகளாக படிக்கட்டுகள் இல்லாத குளத்தை சீரமைக்க மக்கள் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் அரசு நிதி வீணாகியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.