ADDED : மார் 05, 2026 05:32 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் முகவை ஊருணி நடைபாதை பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததால் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள முகவை ஊருணியை சுற்றி நடைபாதை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை, மாலை பொதுமக்கள் அப்பகுதியில் நடைபயிற்சி செய்கின்றனர்.
பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பூங்காவை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அனைத்து கேமராக்களும் சேதமடைந்துள்ளது.
சில கேமராக்கள் உடைந்தும், துாசி படிந்தும் காணப்படுகிறது. இதனால் மாலை 6:00 மணிக்கு மேல் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.
பூங்காவின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
