/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடைந்த பயிர்கள் குறித்து ஆய்வு
/
சேதமடைந்த பயிர்கள் குறித்து ஆய்வு
ADDED : டிச 18, 2024 06:52 AM
கமுதி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கமுதி வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல், மிளகாய், வாழை உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்கின்றனர். கமுதி வட்டாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. கமுதி அருகே கீழராமநதி, ராமசாமிபட்டி, கோரைபள்ளம், கே.எம்.கோட்டை, காவடிப்பட்டி, நீராவி கரிசல்குளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான நெல், மிளகாய், தக்காளி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கமுதி அருகே கோரைபள்ளம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மிளகாய், தக்காளி பயிர்கள் பாதிப்பு குறித்து கமுதி வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து பயிர்கள் வீணாகியுள்ளது. எனவே வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.