/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் வட்டாரத்தில் திட்டப் பணிகள் ஆய்வு
/
முதுகுளத்துார் வட்டாரத்தில் திட்டப் பணிகள் ஆய்வு
ADDED : பிப் 22, 2024 11:17 PM
முதுகுளத்துார் : -முதுகுளத்துார் வட்டாரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் நடந்தது.
முதுகுளத்துார் அருகே தேரிருவேலி கிராமத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் இருப்பு, செயல்பாடுகள் குறித்தும் ரேஷன் கடை, வி.ஏ.ஓ., ஆர்.ஐ., ஊராட்சி அலுவலகம், கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தேரிருவேலி போலீஸ் ஸ்டேஷனில் செயல்பட்டு வரும் சி.சி.டி.வி., கேமரா மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளின் செயல்பாடுகளை பார்வையிட்டார். குமாரகுருச்சி, கருமல் ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. அங்கு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டார்.
சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மாரிசெல்வி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் மனோகரன், தாசில்தார் சடையாண்டி உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.