/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை-எஸ்.பி.பட்டினம் சாலையில் ஆய்வுப்பணி நடந்தது
/
திருவாடானை-எஸ்.பி.பட்டினம் சாலையில் ஆய்வுப்பணி நடந்தது
திருவாடானை-எஸ்.பி.பட்டினம் சாலையில் ஆய்வுப்பணி நடந்தது
திருவாடானை-எஸ்.பி.பட்டினம் சாலையில் ஆய்வுப்பணி நடந்தது
ADDED : ஜூலை 02, 2025 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை-எஸ்.பி.பட்டினம் வரை இரு வழிச்சாலையாக மாற்ற ஆய்வுப் பணிகள் நடந்தது.
திருவாடானை-எஸ்.பி.பட்டினம் ஒரு வழிச்சாலையாக உள்ளது. இச்சாலையை சாலையை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரு வழிச்சாலையாக மாற்ற ஆய்வுப் பணி நேற்று நடந்தது. சாலையின் தரம், அகலம், விரிவாக்க தேவைக்கான மதிப்பீடு, சாலையின் கட்டுமான தரத்தை உறுதி செய்தல் போன்ற ஆய்வுகள் நடந்தது.
திருவாடானை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கீதா, இளநிலை பொறியாளர் லட்சுமணன் மற்றும் அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.