ADDED : மார் 05, 2024 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : தஞ்சாவூர் மாவட்டம்பட்டுக்குகோட்டை பகுதியில் உள்ள பெரியகோட்டை பகுதியின் நில அளவையர் பவ்யா நில அளவை பணிக்கு சென்றபோது தாக்கப்பட்டார்.
இதனை கண்டித்து நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கலெக்டர்அலுவலகம் முன்பு நடந்தது.
மாவட்டத் தலைவர் வினோத்குமார் தலைமை வகித்தார். செயலாளர் முனியசாமி, பொருளாளர்பிரபு துணைத்தலைவர் பூமிநாதன் கோட்டத்தலைவர்கள் நவநீதன், பூப்பாண்டி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நில அளவையர் பவ்யாவை தாக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

