தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நில அளவையர்கள் ஸ்டிரைக் அலுவலக பணிகள் பாதிப்பு

 நில அளவையர்கள் ஸ்டிரைக் அலுவலக பணிகள் பாதிப்பு

 நில அளவையர்கள் ஸ்டிரைக் அலுவலக பணிகள் பாதிப்பு


ADDED : நவ 21, 2025 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2025 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நில அளவை அலுவலர்கள் ஸ்டிரைக்கால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நில அளவை சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். களப்பணியாளர்கள் பணிச்சுமையை போக்கி பணிகளை முறைப்படுத்துதல், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீண்டும் வழங்குதல், ஒப்பந்த முறை பணி நியமனத்தை முற்றிலுமாக கைவிடுதல், நில அளவர் பணியிடங்களை நிரப்பி, ஊதிய முரண்பாடுகளை களைதல், வட்டம், குறுவட்டம், நகர சார் ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாடானை தாலுகாவில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட பத்திரங்களில் இருந்து உரிமையாளர்களுக்கு பட்டா மாறுதல் உள்ளிட்ட பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us