/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் கம்புகளில் துாக்கி நிறுத்தம்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் கம்புகளில் துாக்கி நிறுத்தம்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் கம்புகளில் துாக்கி நிறுத்தம்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் கம்புகளில் துாக்கி நிறுத்தம்
ADDED : ஜூன் 06, 2025 11:54 PM

திருவாடானை: திருவாடானை அருகே ஆண்டாவூரணி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த குடியிருப்புகளுக்கு நகரிகாத்தான் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து மின் வினியோகம்செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள வீடுகளை ஒட்டி தாழ்வாக செல்லும்மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் தாழ்வாக மின்கம்பிகள் செல்கின்றன. அக்கம்பிகள் கம்புகளால் துாக்கி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதாலும், பலத்த காற்று வீசுவதாலும் அச்ச உணர்வுடன் குழந்தைகளுடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்கம்பிகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.