/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளியில் துாய்மை பாரதம் இயக்க விழா
/
பள்ளியில் துாய்மை பாரதம் இயக்க விழா
ADDED : ஜூலை 12, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாப்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் ஓ.என்.ஜி.சி., இணைந்து நடத்திய துாய்மை பாரதம் இயக்க விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு துாய்மை பாரதம் பற்றிய ஓவியப் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, ஸ்கூல் பேக், சணல் பை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஓ.என்.ஜி.சி., நிறுவன மேலாளர் ஜனமே ஜெயம், மற்றும் வாப்ஸ் தொண்டு நிறுவன மேலாளர் நாராயணசாமி, திட்ட கள அலுவலர் அசோக்குமார், மேனகா, சேதுமலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.