/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் சுவாமி அம்மன் வீதி உலா
/
ராமேஸ்வரத்தில் சுவாமி அம்மன் வீதி உலா
ADDED : ஜன 15, 2025 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்; தைப்பொங்கலை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் ரத வீதியில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் உலா வந்தனர்.
நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினர்.
பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து கோயிலில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.