/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் மாலை மாற்றினர்: இன்று ஆடித் திருக்கல்யாணம்
/
ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் மாலை மாற்றினர்: இன்று ஆடித் திருக்கல்யாணம்
ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் மாலை மாற்றினர்: இன்று ஆடித் திருக்கல்யாணம்
ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் மாலை மாற்றினர்: இன்று ஆடித் திருக்கல்யாணம்
ADDED : ஜூலை 29, 2025 11:10 PM

ராமேஸ்வரம் ; ராமேஸ்வரம் கோயில் தபசு மண்டகபடியில் சுவாமி, அம்மன் மாலை மாற்றுதல் நடந்தது. இன்று (ஜூலை 30) சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாண விழா நடக்க உள்ளது.
ஜூலை 19ல் ராமேஸ் வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது.
11ம் நாள் திருவிழாவான நேற்று காலை 6:00 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும், காலை 11:00 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி புறப்பாடாகி தபசு மண்டகப்படியில் எழுந்தருளினார்கள்.
மதியம் 2:40 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று (ஜூலை 30) அதிகாலை 2:00 மணிக்கு தபசு மண்டகபடியில் இருந்து அலங்கார பூப் பல்லாக்கில் அம்மன் புறப்பாடாகி கோயிலுக்கு செல்வார்.
இதையடுத்து இன்று இரவு 7:00 மணிக்கு மேல் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாண விழா நடக்க உள்ளது.
*பரமக்குடி அருகே நயினார்கோவில் சவுந்தரநாயகி, நாகநாத சுவாமி கோயிலில் ஆடிப்பூர விழா ஜூலை 19 கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. ஜூலை 27 காலை ரத வீதிகளில் அம்மன் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை சவுந்தரநாயகி அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் அருள்பாலித்தார்.
நாகநாதசுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரியாவிடையுடன் எழுந்தருளினார்.
பின்னர் மாலை 6:00 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு மேல் நாகநாத சுவாமி சவுந்தரநாயகி திருக்கல்யாணம் நடக்கிறது.