/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலக்கிய போட்டிக்கு சையத் ஹமீதா அரபிக் கல்லுாரி மாணவர்கள் தேர்வு
/
இலக்கிய போட்டிக்கு சையத் ஹமீதா அரபிக் கல்லுாரி மாணவர்கள் தேர்வு
இலக்கிய போட்டிக்கு சையத் ஹமீதா அரபிக் கல்லுாரி மாணவர்கள் தேர்வு
இலக்கிய போட்டிக்கு சையத் ஹமீதா அரபிக் கல்லுாரி மாணவர்கள் தேர்வு
ADDED : நவ 29, 2024 05:23 AM
கீழக்கரை: கோவாவில் நடக்கும் தேசிய கலை மற்றும் இலக்கிய போட்டிக்கு கீழக்கரை சையத் ஹமீதா அரபிக் கல்லுாரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேசிய முஸ்லிம் மாணவர் அமைப்பான எஸ்.எஸ்.எப்., நடத்தும் ஐந்தாவது தேசியப் போட்டி சாகித்யோல்சவ் - 2024 கோவா தலைநகர் பனாஜியில் டிச.1 முதல் நடக்க உள்ளது. கீழக்கரை சையத் ஹமீதா அரபிக் கல்லுாரி மாணவர்கள் ஆங்கில பேச்சு, ஆங்கிலம் எழுதுதல், ஹிந்தி கவிதை மற்றும் ஓதுதல், உருது கவிதை வாசிப்பு, வினாடி வினா ஆகிவற்றில் பங்கேற்றனர்.
ஆங்கில பேச்சுப் போட்டியில் முகமது பசலுல்லாஹ், ஆங்கில எழுத்து போட்டியில் ஷபீக், ஹிந்தி கவிதை போட்டியில் சாஜித், உருது கவிதை போட்டியில் அப்துல் ஹன்னான், வினாடி -வினாவில் சாதிக் முபீன் ஆகியோர் முதலிடம் பிடித்து தேர்வு செய்யப்பட்டனர்.
சமீபத்தில் ராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியிலும் திருப்பூரில் நடந்த மாநில அளவிலான போட்டியிலும் முதல் மூன்று இடங்களை வென்றதால் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. முகமது சதக் அறக்கட்டளை சேர்மன் முகமது யூசுப் சாகிப் மற்றும் கல்லுாரி முதல்வர் அலிஷா நுாரணி உள்ளிட்ட பேராசிரியர்கள் பாராட்டினர்.