பரமக்குடி(தனி) சட்டசபையில் சின்னம் பொருத்தும் பணி: 323 ஓட்டுச்சாவடிகள் அமைப்பு
பரமக்குடி(தனி) சட்டசபையில் சின்னம் பொருத்தும் பணி: 323 ஓட்டுச்சாவடிகள் அமைப்பு
ADDED : ஏப் 16, 2026 10:24 PM

பரமக்குடி: பரமக்குடி(தனி) சட்டசபை தொகுதியில் தாலுகா அலுவலகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நடந்தது.
பரமக்குடி தொகுதியில் 323 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இங்கு 323 பேலட் யூனிட் மிஷின்கள் தேவைப்படும் நிலையில் 20 சதவீதம் கூடுதலாக 387 வந்துள்ளன. விவி பேட் 30 சதவீதம் கூடுதலாக 419 உள்ளன. அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் முத்தையா உட்பட, நாம் தமிழர், தி.மு.க., த.வெ.க., புதிய தமிழகம், அ.பு.த.ம.மு.க., மற்றும் 6 சுயேச்சைகள் உட்பட 12 பேர் களத்தில் உள்ளனர்.
இவர்களுக்கான சின்னங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, 'நோட்டா' உட்பட 13 சின்னங்கள் ஓட்டு இயந்திரங்களில் பொருத்தும் பணி நடந்தது. பரமக்குடி தேர்தல் நடத்தும் அலுவலர், ஆர்.டி.ஓ., சரவணப் பெருமாள் பணிகளை பார்வையிட்டார். காலை 10:00 மணிக்கு துவங்கிய பணிகள் போலீசார் பாதுகாப்புடன் இரவு வரை தொடர்ந்து நடந்தது.
மேலும் அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் தேவையான தளவாட பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உதவி தேர்தல் அலுவலர்கள், தாசில்தார்கள் ராமமூர்த்தி, ஸ்ரீராம், தேர்தல் தாசில்தார் ராமர் உடன் இருந்தனர்.
---
