
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கூடுதல் கலெக்டராக(ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்) பணிபுரிந்த ரெத்தினசாமி சென்னை வணிக வரித்துறை (நிர்வாகம்) இணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதில் சென்னையில் வணிகவரித்துறை இணை கமிஷனராக (உளவுத்துறை) பணிபுரிந்த வீர் பிரதாப் சிங் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு அதிகாரிகள், ஊரக வளர்ச்சி முகமை, ஊராட்சி பிரதிநிதிகள் வாழ்த்து கூறினர்.

