/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாய் நீரை திறக்கக் கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
/
கண்மாய் நீரை திறக்கக் கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
கண்மாய் நீரை திறக்கக் கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
கண்மாய் நீரை திறக்கக் கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
ADDED : ஜன 09, 2025 05:03 AM

திருவாடானை: வயல்களில் தண்ணீர் தேங்கியதால் கண்மாய் நீரை திறக்கக் கோரி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவாடானை அருகே தளிர்மருங்கூர் கண்மாய் பகுதியில் கங்கனாரேந்தல் கிராம மக்கள் விவசாயம் செய்கின்றனர். கண்மாயில் நீர் நிரம்பியதால் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கண்மாய் நீரை வெளியேற்றக்கோரி நேற்று காலை திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு கங்கனாரேந்தல் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் தளிர்மருங்கூர் கண்மாய் கலுங்கை சேதபடுத்தியதாக தளிர்மருங்கூர் கிராம மக்கள் தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து தாசில்தார் அமர்நாத் தலைமையில் இரு கிராம மக்களும் கலந்து கொண்ட சமாதான கூட்டம் நடந்தது.
விவசாயம் பாதிக்கப்படுவதால் கண்மாய் நீரை திறக்க அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தளிர்மருங்கூர் கண்மாய் நீரை நான்கு நாட்களுக்கு திறக்க முடிவு செய்யப்பட்டது.