ADDED : ஏப் 27, 2026 10:47 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: தேர்தல் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து திருவாடானை தாலுகா அலுவலக வளாகம் மக்கள் வருகையால் களைகட்டத் துவங்கியது. சட்டசபை தேர்தலில் 40 நாட்களாக வருவாய்த்துறை அலுவலர்கள் முழுமையான தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் பெறுதல் போன்ற முக்கிய பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது ஓட்டுப்பதிவு முடிந்து அலுவலர்கள் மீண்டும் தாலுகா அலுவலக பணிகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனால் நீண்ட நாட்களாக காத்திருந்த கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அலுவலகத்திற்கு சென்றனர். தாலுகா அலுவலகம் மீண்டும் செயல்படத் துவங்கியது. மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
