/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழக--இலங்கை மீனவர்கள் அக்.29ல் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு
/
தமிழக--இலங்கை மீனவர்கள் அக்.29ல் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு
தமிழக--இலங்கை மீனவர்கள் அக்.29ல் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு
தமிழக--இலங்கை மீனவர்கள் அக்.29ல் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு
ADDED : அக் 16, 2024 02:14 AM
ராமநாதபுரம்:நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழக- -இலங்கை மீனவர்கள் சமரச பேச்சுவார்த்தை அக்.29 ல் கொழும்புவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து, அவர்களது படகுகளை நாட்டுடமையாக்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழக- இலங்கை மீனவர்கள் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது.
இலங்கை தரப்பில் யாழ்ப்பாணம், நெடுந்தீவு மீனவர்கள் சங்கத்தலைவர் அன்னப்பராஜாவும், தமிழகத்தில் உள்ள மீனவர் சங்க அமைப்புகளும் இதற்கான முயற்சிகளை எடுத்தனர்.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் இலங்கை சென்று வந்தார்.
இதையடுத்து இலங்கை- -தமிழக மீனவர்கள் சமரச பேச்சுவார்த்தையை அக்.29 ல் கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள நமது மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகள், சிறையில் உள்ள மீனவர்கள், இந்தியாவில் பறிமுதல் செய்யப்பட்ட இலங்கை படகுகள், கைது செய்யப்பட்ட மீனவர்கள் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால் எல்லைதாண்டும் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.