/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழக சமையல் பொருட்கள் கஞ்சா இலங்கையில் பறிமுதல்
/
தமிழக சமையல் பொருட்கள் கஞ்சா இலங்கையில் பறிமுதல்
ADDED : ஜூலை 14, 2025 06:19 AM

ராமநாதபுரம்: -தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட சமையல் பொருட்கள், கஞ்சாவை அந்நாட்டு கடற்படையினர்பறிமுதல் செய்தனர்.இலங்கை, கிளிநொச்சி லோக்கன்னாவாடியா, டெவில்ஸ் பாய்ன்ட் கடற்கரைப்பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் வாகன சோதனையில்ஈடுபட்டனர். அப்போது இரு சரக்குவாகனங்களில் 300 கிலோ ஏலக்காய், 260 கிலோ மஞ்சள் துாள், 273 கிலோ சுக்கு, அழகுசாதனப்பொருட்கள், மருந்துகள், மசாலா பொருட்கள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்து இலங்கையை சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட இதன்மதிப்பு ரூ.30 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
* யாழ்ப்பாணம் எலுவை தீவுக்கு அருகில் புதுடு பகுதியில் கடலில் மிதந்த சந்தேகத்திற்கிடமான பையை மீட்ட அந்நாட்டு கடற்படையினர் அதிலிருந்து 38 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.50 கோடி.
கடற்படை சோதனை காரணமாக கரைக்கு கொண்டு வர முடியாமல் கடல் பகுதியில் கடத்தல்காரர்கள் வீசி சென்றிருக்கலாம், என தெரிவிக்கப்பட்டது. கஞ்சாவை ஊர்காவல்துறை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதனை கடத்தியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.