/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை கட்டுமான வாரிய தலைவர் குற்றச்சாட்டு

ADDED : பிப் 01, 2024 02:21 AM

ராமநாதபுரம்:''தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது'' என தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் நடந்த கலந்துரையாடல்கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் மட்டும் ரூ.1257 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளர் வீடு கட்ட ரூ.4 லட்சம் வழங்கும் திட்டம், குணப்படுத்த முடியாத நோயாளிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம், தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயிலும் போது கல்வி, விடுதி கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களையும் வாரியம் ஏற்கும்.
இதர செலவுகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். முதல்வர் ரூ.7 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து 27 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார். இதனால் தொழில் துறையில் 14 வது இடத்தில் இருந்த தமிழகம் முதலிடத்திற்கு வந்துள்ளது.
ஆனால் தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. நல வாரியங்களில் பதிவு செய்த 70 லட்சம் தொழிலாளர்களின் விபரங்களை காணவில்லை என்று அரசியலுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர். பேரிடர் நேரங்களில் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் பழுது ஏற்படுவது உண்டு.
காணாமல் போன விபரங்களுக்கு வாரியம் பொறுப்பேற்கும். தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகள் பெறும் போது ஆவணங்களை வழங்கினால் மட்டும் போதும் என்றார்.
தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் குலசேகரன், பனை மரதொழிலாளர் நல வாரிய உறுப்பினர் கலாவதி உடனிருந்தனர்.