/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கையில் ரூ.24 கோடி மதிப்புள்ள தமிழக மீனவர்கள் படகுகள் உடைப்பு
/
இலங்கையில் ரூ.24 கோடி மதிப்புள்ள தமிழக மீனவர்கள் படகுகள் உடைப்பு
இலங்கையில் ரூ.24 கோடி மதிப்புள்ள தமிழக மீனவர்கள் படகுகள் உடைப்பு
இலங்கையில் ரூ.24 கோடி மதிப்புள்ள தமிழக மீனவர்கள் படகுகள் உடைப்பு
ADDED : ஆக 31, 2025 07:06 AM

ராமேஸ்வரம்:இலங்கை நீதிமன்றம் அரசுடமையாக்கிய ரூ. 24 கோடி மதிப்புள்ள தமிழக மீனவர்களின் விசைபடகுகள் உடைத்து அகற்றப்பட்டன.
2018 முதல் 2022 வரை ராமேஸ்வரம் முதல் புதுச்சேரி வரை மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களின் 80 விசைப்படகுகளை இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் அரசுடமையாக்கி உத்தரவிட்டது.
இப்படகுகள் காங்கேசன்துறை அருகே மயிலட்டி துறைமுகம் கடற்கரையில் சின்னாபின்னமாகி கிடந்தன.
இப்படகுகள் நேற்று இலங்கை மீன்துறை அதிகாரிகள் முன்னிலையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் உடைத்து அகற்றப்பட்டன.
படகில் உடைத்து எடுத்த இரும்பு தளவாட பொருள்களை வியாபாரியிடம் ஏலத்தில் விற்றனர். உடைக்கப்பட்ட படகுகளின் இந்திய மதிப்பு ரூ.24 கோடியாகும். இப்படகுகளை உடைத்த போது அங்கு கடற்கரையில் ஒதுங்கி கிடந்த 100 கிலோ கஞ்சா மூடைகளை போலீசார் கைப்பற்றினர்.
இதனை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய போது இலங்கை கடற்படை வீரர்களை கண்டதும் கடத்தல்காரர்கள் கடலில் துாக்கி வீசி இருக்கலாம் என இலங்கை போலீசார் தெரிவித்தனர்.