/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 13, 2024 04:26 AM

திருப்புல்லாணி : தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் திருப்புல்லாணி, முதுகுளத்துாரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்புல்லாணி பஸ்ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முரளி மோகன், செங்கோல் திரவியம், ரமேஷ் குமார் ஆகியோர் பேசினர்.
இடைநிலை ஆசிரியருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.புதிய பென்ஷன்திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அக்.12ல் பள்ளிகல்வித்துறை அமைச்சர்முன்னிலையில் அரசு ஏற்றுக்கொண்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
*முதுகுளத்துார் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவர் சண்முகசுந்தரம்,தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் கூட்டணி தலைவர் ஆனந்தன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் திருப்பதி முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மூன்று சங்கங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.