/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர் இன்று ரயில் மறியல்
/
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர் இன்று ரயில் மறியல்
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர் இன்று ரயில் மறியல்
தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர் இன்று ரயில் மறியல்
ADDED : ஏப் 08, 2025 05:36 AM
ராமநாதபுரம்: -தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஏப்., 8)ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர். தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் பாக்கியநாதன் கூறியதாவது:
டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது வழக்குப்பதிந்துள்ள மத்திய அரசை கண்டித்தும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணத் தொகை மற்றும் தேசிய வேளாண் காப்பீட்டில் நுாறு சதவீதம் வழங்க வேண்டும்.
தொடர் மழை, நோயால் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகையும் மற்றும் தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி இன்று (ஏப்.,8) காலை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றார்.