ADDED : ஜன 20, 2025 07:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தமிழ் சங்கத்தின் சார்பில், திருவள்ளுவர் தினம், பொங்கல் விழா, அரவிந்த அரங்கம் ஆண்டு விழா நடந்தது.
தமிழ்சங்க மாவட்டச்செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செந்தில்குமார் 'இளைமையிலும் முதுமை' என்ற தலைப்பில் முன்னிலை வகித்து பேசினார். சிறப்பு கவியரங்கத்தில் ஆயிஷா பர்வீன், மாணிக்கவாசகம், மணிவண்ணன், அப்துல்மாலிக், கு.ரா கவி பாடினர். திருவள்ளுவர் தின போட்டியில் வென்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.
தலைவர் அப்துல்சலாம், பொருளாளர் மங்களசுந்தரமூர்த்தி, டாக்டர் மதுரம், இன்னர் வீல் சங்க முன்னாள் தலைவி கவிதா, உறுப்பினர்கள் பங்கேற்றனர்.