ADDED : பிப் 19, 2026 06:37 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ரஞ்சித் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:
ராமநாதபுரம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களுக்கு உரிய விடுமுறை அளிப்பதில்லை. இதனால் மன அழுத்தத்தில் பணிபுரிகின்றனர். துய்மைப் பணி ஒப்பந்த முறையில் நடப்பதால் அவர்களுக்கு உரிய ஊதியமும் சரியாக செல்வதில்லை. நகராட்சி ஆணையர் இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றார். மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், புகழ், ராமேஸ்வரம் நகர் செயலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
