/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
25 ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட தார் ரோடு; தினமலர் செய்தி எதிரொலி

ADDED : ஜன 02, 2025 11:26 PM
சிக்கல்; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிக்கல் ஊராட்சி பொட்டல் பச்சேரி கிராமத்திற்கு 25 ஆண்டுகளுக்கு பின் தார் ரோடு அமைக்கப்பட்டது.
சிக்கலில் இருந்து 5 கி.மீ.,ல் உள்ள பொட்டல்பச்சரி கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். 2 கி.மீ.,க்கு கிராம ரோடு குண்டும் குழியுமாக சேதமடைந்ததால் கிராம மக்கள் சிரமப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கடந்த வாரம் சேதமடைந்த 2 கி.மீ., ரோடு புதிதாக அமைக்கப்பட்டது. கிராம மக்கள் கூறியதாவது, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த ரோட்டில் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தோம்.
தற்போது புதிய தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.